எங்களுக்கும் அசிங்கமாக போஸ்டர் அடிக்கத் தெரியும்: உதயநிதி ஸ்டாலின் காட்டம்.

எங்களுக்கும் அசிங்கமாக போஸ்டர் அடிக்கத் தெரியும்: போஸ்டர் விவகாரத்தில் கோவையில் சீறிய உதயநிதி ஸ்டாலின்.

கோவை தெற்கு வட்டாச்சியர் அலுவலகம் முன்பு காவல் துறையைக் கண்டித்து தி.மு.க சார்பில் இளைஞரணித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், பொதுச் செயலாளர் துரைமுருகன் உள்ளிட்ட தி.மு.க தலைவர்களை கேலியாக சித்தரித்து ஒட்டப்பட்ட போஸ்டரைக் கிழித்ததற்காக 12 திமுகவினர் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின், ‘இது வெறும் போஸ்டர் ஒட்டியதற்கான போராட்டம் கிடையாது.

கோவையில் வேலுமணி அடிக்காத கொள்ளை கிடையாது. தேர்தலில் மக்கள் சாவு மணி அடிக்கப் போகின்றனர்.துரத்தித் துரத்தி அடிக்கப்போகின்றனர். பெயரை போட்டு போஸ்டர் அடிக்க கூட தைரியமில்லாதவர் ஒரு அமைச்சர், வேலுமணி. இதை விட அசிங்கமாக, சிறப்பாக எங்களுக்கும் போஸ்டர் அடிக்க தெரியும். குனியமுத்தூர் காவல் நிலையத்தில் போராட்டம் நடத்த திட்டமிட்டபோது அனுமதி மறுத்து, தெற்கு வட்டாச்சியர் அலுவலகம் முன்பு அனுமதி கொடுத்தனர். காலையில் அனுமதி மறுத்துள்ளனர். கைதுக்கும் தயாராகவே இங்கு வந்தேன். மிசாவையே பார்த்த இயக்கம் திமுக எனவும்,
திமுக தலைவரும் இங்கே போராட்டம் நடத்த வருவதாக சொன்னவுடன், கைது செய்யப்பட்ட திமுகவினர் விடுவிக்கப்பட்டனர்.

டேபிளுக்கு அடியில் ஊர்ந்து சென்று பதவியைப் பிடித்தவர் எடப்பாடி பழனிச்சாமி. இன்னும் 6 மாதம்தான் இருக்கு என்பதை காவல் துறையினர் உணர வேண்டும். யார் முதல்வர் என்பதே தெரியவில்லை. நிழல் முதல்வராக எஸ்.பி.வேலுமணி இருக்கின்றார்.

அடிமை ஆட்சி நடைபெற்று கொண்டு இருக்கின்றது. கொரொனாவை வென்றெடுத்த நாயகனே என்று நோட்டிஸ் ஓட்டியதில் இருந்து கோவையில் நோய் அதிகரித்துள்ளது.

இது கொரோனாவை விட மோசமாக ஆட்சி. வேலுமணி அல்ல ஊழல் மணி. பிளிச்சிங் பவுடர் முதல் மாஸ்க் வரை அனைத்திலும் ஊழல் நடைபெற்றுள்ளது. கே.சி.பி, ஆலயம் அறக்கட்டளை என 7 நிறுவனங்கள் வைத்து அவற்றில் மாற்றி மாற்றி டெண்டர் எடுத்து கொள்ளையடித்து இருக்கின்றனர்.

1,300 ரூபாய் மதிப்பு பல்பை 6,000 ரூபாய்க்கு வாங்கி இருக்கின்றார்கள். ஊழல் செய்தற்கான அனைத்து ஆதாரங்களும் மு.க.ஸ்டாலினிடம் இருக்கின்றது. ஆட்சி மாறியவுடன் அனைவரும் உள்ளே போகப்போகின்றனர்.

நீட் தேர்வை இங்கே அனுமதித்தது எடப்பாடி அரசு. வெறும் 8 அரசு பள்ளி மாணவர்கள் மட்டுமே நீட் தேர்வின் மூலம் மருத்துவராக முடியும். 7.5 சதவீத இட ஒதுக்கீட்டை பெற, சசிகலா காலில் விழுந்ததை போல, முதல்வர் ராஜ்பவனுக்கு தவழ்ந்து போய் மண்டியிட்டாவது அனுமதி வாங்கி கொடுங்கள். போஸ்டர் ஓட்டியவர்கள் மீது நடவடிக்கை இல்லை எனில் அடுத்த முறை குனியமுத்தூர் காவல் நிலையம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெறும்’ என்று காட்டமாக விமர்ச்சனம் செய்தார்.

Leave a Reply

error: Content is protected !!