திருப்பரங்குன்றத்தில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வரும் கிருத்திகா தங்கப்பாண்டி!


திருநகரில் உலகத்தரம் வாய்ந்த சிந்தடிக் ஹாக்கி மைதானம் கட்டி தரப்படும். அறிவியல் பூங்காவில் நவீன ஆய்வக கருவிகள் அமைக்கப்படும்.

உச்சி கருப்பசாமி கோவில் மேட்டுப்பகுதியில் விட்டுப்போனவர்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். -திமுக வேட்பாளர் கிருத்திகா தங்கபாண்டி வாக்குறுதி

திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கிருத்திகா தங்கபாண்டி உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு கேட்டு திருநகர் 3 வது பேருந்து நிறுத்தம்,மஹாலக்ஷ்மி காலனி,சொர்ணம் காலனி ஆகிய பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.தொடர்ந்து வேட்பாளர் கிருத்திகா தங்கப்பாண்டிக்கு மகாலக்ஷ்மி காலனி பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது பேசிய திமுக வேட்பாளர் கிருத்திகா தங்கபாண்டியன் கூறுகையில்:

இந்த ஆட்சி பெண்களுக்கான ஆட்சி. திராவிட மாடல் 2.0 ஆட்சி தான் அமையப்போகிறது. 8000 மதிப்புள்ள மின்சார பொருட்களுக்கான கூப்பன் வழங்கப்படும் என்று முதல்வர் உறுதியளித்திருக்கிறார். 2.70 கோடி மதிப்பில் அண்ணா அறிவியல் பூங்கா பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

அறிவியல் பூங்காவில் நவீன ஆய்வக கருவிகள் அமைக்கப்படும். இந்த பகுதியை சுற்றியுள்ள வியாபாரிகளுக்கு வியாபாரிகள் சங்க கட்டிடம் கட்டி தரப்படும். உலகத்தரம் வாய்ந்த சிந்தடிக் ஹாக்கி மைதானம் கட்டி தரப்படும். தபால் நிலையம் புதிய கட்டிடம் கட்டித் தரப்படும். மின் மயானமாக மாற்றுத்திறப்படும். உச்சையா கோவில் மேட்டுப்பகுதியில் நூறு பேர் ஏற்கனவே பட்டா பெற்ற நிலையில் விட்டுப் போனவர்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். அறிவியல் பூங்கா அருகே சமுதாயக்கூடம் கட்டித் தரப்படும். புங்கங்குளம் கண்மாய் தூர்வாரப்படும் என உறுதியளித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!