
மதுரை பட்டதாரி வாலிபர் பத்திநாதன்.இவர் ஊனமுற்றோர் பிரிவில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார். அதேபோல் பாரா ஒலிம்பிக் போட்டியிலும் பல்வேறு பதக்கங்களையும் விருதுகளையும் வென்றுள்ளார். மேலும் பாரா ஒலிம்பிக் போட்டியில் பயிற்சியாளராகவும் அணியின் கேப்டனாகவும் பணியாற்றியுள்ளார். கடந்த 10 ஆண்டுகளாக அரசு பணிக்காக தமிழக அரசிடம் பல்வேறு கோரிக்கை வைத்தும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. இந்நிலையில் இன்று மதுரை வந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து அரசு பணிவழங்க கோரி மனு அளிக்க நீண்ட நேரம் காத்திருந்தார். அவரை காவல் துறை அதிகாரிகள் அனுமதி கொடுக்க மறுத்த நிலையில் முதல்வரிடம் ஏற்கனவே மனு அளித்த விபரத்தையும் தற்போது மனு அளிக்க உள்ள விவரத்தையும் மன்றாடி கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் அவருக்கு மனு அளிக்க அனுமதி வழங்கப்பட்டது. பின்னர் முதல்வரிடம் நேரடியாக கோர்க்கை மனுவை அளித்து தனக்கு கருணை அடிப்படையில் பணி வழங்குமாறு கேட்டுக் கொண்டார்.