32 வது தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தினை முன்னிட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சுகுண சிங் IPS அவர்களின் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் காவல்துறையினரால் பொதுமக்களிடையே தலைக்கவசம் மற்றும் சீட்பெல்ட் அணிவதன் முக்கியத்துவம் குறித்தும் மற்றும் சாலை விதிமுறைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இதேபோல் இன்று சங்கரன்கோவில் போக்குவரத்து காவல் துறையின் சார்பாக பொதுமக்களிடையே சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக ஊர்க்காவல் படையினர், ஆட்டோ ஓட்டுனர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஆகியோர் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணியானது சங்கரன்கோவில் சுற்றுலா மாளிகையில் தொடங்கி கோவில் வாசல் வரை நடைபெற்றது..இதனை வட்டார போக்குவரத்து அலுவலர் திரு.கண்ணன் மற்றும் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு. மார்ட்டின் ஆகியோர் கொடியசைத்து துவங்கி வைத்தனர். இப்பேரணியானது சாலை பாதுகாப்பு உயிர் பாதுகாப்பு,தலைக்கவசம் உயிர்க்கவசம் மற்றும் சீட்பெல்ட அணிந்து சாலை விதிகளை மதித்து சாலையில் பாதுகாப்புடன் பயணம் செய்வது குறித்து எடுத்துரைக்கும் வண்ணம் அமைந்தது.. இப்பேரணியில் சங்கரன்கோவில் நகர் காவல் ஆய்வாளர் திருமதி. மங்கையர்க்கரசி, மோட்டார் வாகன ஆய்வாளர் திரு. ராஜன், போக்குவரத்து காவல் துறையினர் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் பேரணியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்..