மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள பாண்டியராஜபுரம் அரசு சர்க்கரை ஆலை மேல்நிலைப்ப பள்ளியில் 2023 ..2024 படித்த முன்னாள் மாணவர்கள் சந்தித்துக் கொண்ட நெகிழ்ச்சி சம்பவம் நடைபெற்றது பொதுத்தேர்வில் முதல் மூன்று மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு.
பரிசுத்தொகையும்.. விருதுகளும்.அதிக மதிப்பெண் எடுத்த பெற்றோர்களை கௌரவிக்கும் விதமாக மாணவர்களின் பெற்றோர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செய்தும். பாடங்களில் 100/100 எடுத்த மாணவர்களுக்கு பரிசுகளும் விருதுகளும்..
அதற்குக் காரணமான ஆசிரியர்களுக்கும் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
. இவ்விழாவில்சர்க்கரை ஆலை மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர். விஜயகுமார் தலைமை தாங்கினார்.. இப்பள்ளியின் முன்னாள் மாணவர் லெட்சர்கான் சாகுல் ஹமீது. முன்னிலை வகித்தார்.. முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர். ராமராஜன். நன்றி கூறினார்
இப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவரும் சமூக ஆர்வலருமான . லெட்சர்கான் சாகுல் அமீது கூறுகையில்..
இனி வரும் காலங்களில் இப்பள்ளிக்கும் இப்பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கும் முன்னாள் மாணவர்கள் சார்பாக நலத்திட்டங்களை வழங்கி உதவிகளை செய்து. விளையாட்டுத்துறையில். மாநில அளவில் செல்லும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை பரிசுத் தொகை வழங்கப்படும் என்றும். அப்பள்ளியில் படிக்கும் மாணவர்களை ஊக்கம் தரும் விதமாக முன்னாள் மாணவர்கள் சங்கம் செயல்படும் என்று தெரிவித்தார்…
முன்னாள் மாணவர்கள் சங்க தலைவர் கண்ணன் . துணைத் தலைவர் செந்தாமரைக்கண்ணன். துணைத் தலைவர் பரணி ராஜா. பொதுச் செயலாளர் ராமராஜன். துணைப் பொதுச் செயலாளர் லெட்சர் கான் சாகுல் ஹமீது. மற்றும் செயற்குழு உறுப்பினர்களும் மன்ற உறுப்பினர்கள் மாணவர்களின் பெற்றோர்கள். பொதுமக்கள் ஆகியோர் முன்னாள்மாணவர்கள் சங்கத்தினரை வெகுவாக பாராட்டினர் .
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.