சென்னை: வரும் 20 ஆம் தேதி முதல் சென்னை எழும்பூர் முதல் நாகர்கோவில் வரை ஒரு வந்தே பாரத் ரயில் இயக்கப்பட உள்ளது. இதேபோல் அதே நாளில் மதுரை – பெங்களூர் இடையேயும் வந்தே பாரத் ரயில் சேவை இயக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த 2 ரயில்களையும் சென்னையில் பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளதாக கூறப்படுகிறது.
நாடு முழுவதும் பல்வேறு வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. அதிவேகம், விமானத்திற்கு நிகரான சொகுசு, முழுவதும் ஏசி வசதி என பயணிகளை கவரும் விதமாக வந்தே பாரத் ரயில்கள் உள்ளன. இதனால், பயணிகள் மத்தியில் இந்த ரயிலுக்கு நல்ல வரவேற்பு உள்ளது.
வந்தே பாரத்: கடந்த 2019 ஆம் ஆண்டு டெல்லி – வாரணாசி இடையே இந்த ரயில் முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போது முதல் தொடர்ந்து பல்வேறு வழித்தடங்களில் வந்தே பாரத் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்திலும் சென்னை- நெல்லை, சென்னை- மைசூரு, சென்னை- கோவை, கோவை- பெங்களூர் உள்ளிட்ட வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
மதுரை – பெங்களூர்: இந்த நிலையில்தான், சென்னை -நாகர்கோவில் இடையே வந்தே பாரத் சிறப்பு ரயில் இயக்கப்பட்டு வந்தது. இந்த வழித்தடத்தில் வந்தே பாரத் ரயிலை நிரந்தரமாக இயக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். அதேபோல மதுரையில் இருந்து பெங்களூருக்கு வந்தே பாரத் ரயில் இயக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக பயணிகள் மத்தியில் உள்ளது.
ஏனெனில் தென் மாவட்டங்களில் இருந்து ஐடி தலைநகரான பெங்களூருக்கு ஏராளமானவர்கள் பணி நிமித்தமாகவும் பல்வேறு காரணங்களுக்காகவும் செல்கிறார்கள். இதனால், மதுரையில் இருந்து பெங்களூருக்கு வந்தே பாரத் ரயில் வந்தால் பயண நேரம் கணிசமாக மிச்சம் ஆகும் என்பதால் ரயிலை இயக்கப்டுமா என்ற எதிர்பாப்பு பயணிகளிடையே நிலவியது. மோடியின் முதல் பயணம்: இந்த நிலையில்தான், சென்னை – நாகர்கோவில் மற்றும் மதுரை – பெங்களூர் இடையேயான வந்தே பாரத் ரயில் சேவை வரும் 20 ஆம் தேதி முதல் தொடங்கி வைக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்திற்கு வரும் பிரதமர் மோடி இந்த ரயில் சேவையை கொடி அசைத்து துவங்கி வைக்க உள்ளதாக கூறப்படுகிறது.
லோக்சபா தேர்தலுக்கு பிறகு 3-வது முறையாக பிரதமராக பதவியேற்றுள்ள மோடி, தமிழகத்திற்கு வரும் முதல் பயணமாக இது அமைய உள்ளது. எனினும், மோடியின் பயணம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை. வந்தே பாரத் ரயில்: தமிழகத்தில் ஏற்கனவே சென்னை – கோவை, சென்னை- நெல்லை, சென்னை – மைசூர், கோவை- பெங்களூர், சென்னை விஜயவாடா உள்ளிட்ட வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயங்கி வருகின்றன. இந்த நிலையில் தான் சென்னை எழும்பூர் – நாகர்கோவில் மற்றும் பெங்களூர் – மதுரை இடையே வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கப்பட உள்ளது. பயணிகளின் தேவையை கருத்தில் கொண்டு இயக்கப்பட உள்ளது. வந்தே பாரத் ரயில், முழுவதும் ஏசி வசதி, சொகுசான இருக்கைகள், தானியங்கி கதவு, பயோ கழிப்பறைகள் என விமானத்திற்கு நிகரான வசதிகளுடன் இந்த வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு இந்த ரயிலுக்கு கிடைத்துள்ளது. தற்போது படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில்களை தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.