50வது ஆண்டு பொன்விழா கண்டு மக்கள் சேவையில் மகத்தான சாதனை புரியும் அஞ்சுகிராமம் ஜவகர் ஸ்டோர்.

கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமத்தில் 50வது பொன்விழா ஆண்டை கடந்து மூன்று தலைமுறையாக ஜவுளித்துறையில் கோலோச்சும் ஜவஹர் ஸ்டோர்ஸ் நிறுவனம்.

குமரி, நெல்லை மாவட்ட எல்லை பகுதியில் அமைந்துள்ள அஞ்சுகிராமம் சந்திப்பில் இருக்கும் பிரம்மாண்டமான ஜவுளி நிறுவனம் ஜவஹர் ஸ்டோர்ஸ் ஆகும். இந்நிறுவனம் காரானா காலத்திலும் வெற்றி பாதையில் வீர நடை போட்டு வருகிறது.

1970 காலகட்டங்களில் முகைதீன் அப்துல் காதர் என்பவரால் சிறிய அளவில் தொடங்கப்பட்ட ஜவுளி நிறுவனம் தான் ஜவஹர் ஸ்டோர்ஸ். பின்னர் அவரது மகனான செய்யது அப்துல் ரஹீம் காலகட்டத்தில் அவர் ஜவுளி விற்பனையில் புகுத்திய நவீன முறைகளில் காரணமாக அசுர வளர்ச்சியை எட்டியது.

மூன்றாவது தலைமுறையாக இவரது மகன்களான நஸீம், ஜெஸீம் மற்றும் வஸீம் ஆகியோரின் தீவிர முயற்சியால் ஜவுளித் துறையில் உச்சத்தை அடைந்துள்ளது. இந்த ஜவுளித் துறையின் மூலம் கிடைத்த வருமானத்தை அவர்கள் தங்களுக்கு என்று மட்டும் ஒதுக்காமல் பிறருக்கும் பகிர்ந்து அளித்து உள்ளனர்.

ஜவஹர் ஸ்டோர்ஸ் சார்பில் இந்த கொரானா காலகட்டத்தில் அஞ்சுகிராமம் பகுதியில் உணவின்றி தவித்த ஏழை-எளிய பொது மக்களுக்கு அரிசி, காய்கறி உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன. பொதுமக்களை காரோனாவில் இருந்து காக்கும் விதமாக கபசுரக் குடிநீர், முககவசம், நோய் தடுப்பு மாத்திரைகள் ஆகியன வழங்கப்பட்டது.

இதையெல்லாம் விட மேலாக பல பெரிய நிறுவனங்கள் கூட தங்கள் தொழிலாளர்களுக்கு கொரானா காலகட்டத்தில் ஊதியம் வழங்காத நிலையில், மூன்று மாத காலம் கடை திறக்கப்படாமல் மூடியே இருந்த நிலையிலும் தனது நிறுவனத்தில் பணியாற்றிய அனைத்து ஊழியர்களுக்கும் முழு சம்பளம் வழங்கி இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியது ஜவஹர் ஸ்டோர்ஸ் நிர்வாகம்.

இதுகுறித்து நிர்வாக இயக்குனர் ஜெஸீம் கூறுகையில், எங்களது ஜவுளி நிறுவனத்திற்கு வரும் வாடிக்கையாளர்கள் கடையில் விட்டு வெளியேறும் போது முழுமையான மன திருப்தியுடன் செல்லவேண்டும். அதுவே எங்கள் நோக்கம். அதற்காகவே வாடிக்கையாளர்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் ஜவுளி பொருட்களை இறக்குமதி செய்து வருகிறோம்.

மகளிர் சுய உதவி குழுக்களுக்கு குறைந்த விலையில் சேலைகள் வழங்குகிறோம். அவர்கள் அதை விற்பனை செய்த பிறகு எங்களுக்கு பணத்தை தருகிறார்கள். அதேபோல ஏராளமான அதிரடி பரிசுகளையும் சலுகைகளையும் தொடர்ந்து வழங்குகிறோம். கடைக்கு வரும் வாடிக்கையாளர்களை முகமலர்ச்சியுடன் கூடிய சிறந்த வரவேற்பும், உபசரிக்கும் பண்பு, நம்பிக்கை, நாணயம், கைராசி, நிறைந்த தரம், சிறந்த வாடிக்கையாளர் சேவை, என்ற கொள்கையே எங்கள் வளர்ச்சிக்கும் வெற்றிக்கும் காரணம் என்றார்.

இயன்றதைச் செய்வோம் ஏழைகளுக்கு என்ற மகத்தான மனிதாபிமான சேவை மனப்பான்மையுடன் ஜவுளித் துறையில் மட்டுமின்றி அரசியலிலும் கோலோச்சி வரும்
ஜவஹர் ஸ்டோர்ஸ் உரிமையாளர்களில் ஒருவரான ஜெஸீம் ஆளும் அதிமுக கட்சியில் குமரி கிழக்கு மாவட்ட வர்த்தக அணி மாவட்ட செயலாளராக செயல்பட்டு வரும் இவர், அரசியலிலும் தீவிர ஈடுபாடு காட்டி வருகிறார். இவர் தான் சார்ந்த ஜவுளித்துறை மூலமாகவும், அரசியல் வழியாகவும் பொதுமக்களுக்கும், ஏழைகளுக்கும் தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

error: Content is protected !!