
தினந்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து வருவது சாமானிய மக்களை வேதனையடையச் செய்துள்ளது. மேலும் நாட்டில் பல்வேறு மாநிலங்களில் பெட்ரோல் லிட்டருக்கு 100 ரூபாய்க்கு மேல் கடந்துவிட்டது.

இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயில் அருகே உணவகம் ஒன்றில் புரோட்டோ வாங்கினால் ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசம் என்ற அறிவிப்பு மக்கள் மத்தியில் ஆச்சரியத்தையும் வியப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயில் கார்மல் மவுன்ட் ரோடு அருகே நாளை சித்திரை திருநாளை முன்னிட்டு உதயமாக உள்ளது புகழ் அறுசுவையகம். மேலும் இது குறித்த விளம்பர போஸ்டர்கள் நாகர்கோவில் பகுதி முழுவதும் ஒட்டப்பட்டுள்ளது.

இது குறித்து உணவகத்தின் உரிமையாளர் , “மக்களுக்கு நல்ல சத்தான உணவுகளை வழங்க வேண்டும் என்பதற்காக உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய உணவுகளை விற்பனை செய்ய உள்ளோம் இதை இப்பகுதி மக்களுக்கு தெரியப்படுத்துவதற்காக அதிரடி ஆஃபராக ஒரு லிட்டர் பெட்ரோல் வழங்க திட்டமிட்டுள்ளோம் என தெரிவித்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.