இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்து வரும் படத்தை இயக்கி வருகிறார். ஸ்ரீலக்ஷ்மி மூவிஸ் நிறுவனம் தயாரிக்கும் இது, சிவகார்த்திகேயனின் 23-வது படம். இதில் ருக்மணி வசந்த் நாயகியாக நடிக்கிறார். மலையாள நடிகர் பிஜு மேனன், இந்தி நடிகர் வித்யுத் ஜம்வால் உட்பட பலர் நடிக்கின்றனர்.
இதற்கிடையே, இந்தி நடிகர் சல்மான்கான் நடிக்கும் ‘சிக்கந்தர்’ படத்தை அவர் இயக்க இருப்பதாக அறிவிப்பு வெளியானது. இதில் சத்யராஜ் வில்லனாகவும் ராஷ்மிகா மந்தனா நாயகியாகவும் நடிக்க இருப்பதாகக் கூறப்பட்டது. சாஜித் நாடியத்வாலா தயாரிக்கும் இதன் படப்பிடிப்பு மும்பையில் தொடங்கியுள்ளது. முதல் கட்டப் படப்பிடிப்பில் அதிரடி ஆக் ஷன் காட்சிகள் படமாக்கப்பட இருக்கின்றன. படப்பிடிப்பில் ஏ.ஆர் முருகதாஸ், தயாரிப்பாளர் சாஜித் ஆகியோருடன் இருக்கும் ஒளிப்படத்தை சல்மான் கான் வெளியிட்டுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.