திருச்செந்தூர் – பரமன்குறிச்சி சாலையை சீரமைக்க நடவடிக்கை : ஆட்சியரிடம் கோரிக்கை

திருச்செந்தூரிலிருந்து பரமன்குறிச்சி செல்லும் சாலையை உடனே சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பனங்காட்டு மக்கள் கழகம் தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் செல்வன் தலைமையில் கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனு : திருச்செந்தூரில் இருந்து பரமன்குறிச்சி வழியாக தினமும் பொதுமக்கள் வாகன போக்குவரத்து பயன்படுத்தி வருகிறார்கள். கடந்த 2 வருடங்களுக்கும் மேலாக திருச்செந்தூரிலிருந்து பரமன்குறிச்சி வழியாக செல்லும் சாலை குண்டும் குழியுமாக மிகவும் மோசமான நிலையில் பொதுமக்கள் பயன்படுத்தி வருகிறார்கள்.

அவசர உதவிக்கு 108 ஆம்புலன்ஸ்,கர்ப்பிணி பெண்கள் செல்ல மிகவும் சிரமமாக உள்ளது, இதனால் உயிரிழப்பு ஏற்படவும் வாய்ப்புள்ளது. பள்ளி கல்லூரி வாகனங்கள் தனியார் வாகனங்கள் சாலையின் மோசமான நிலையால் பழுதடைந்து சிரமத்திற்கு ஆளாக்கப்படுகிறார்கள். பொதுமக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. திருச்செந்தூரிலிருந்து பரமன்குறிச்சி வழி செல்லும் சாலையை உடனே சீரமைக்க நடவடிக்கை எடுக்க உரிய துறைக்கு உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். மாநில வழக்கறிஞர் பிரிவு தலைவர் சிலுவை, அற்புதராஜ் உள்ளி்ட்டோர் உடனிருந்தனர்.

Leave a Reply

error: Content is protected !!