மதுரையில் பரபரப்பு; போராடினால் பொய் வழக்கு போடும் போலீஸ்..!நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் பெண் புகார்…

மதுரை மாவட்டம் கூத்தியார்குண்டு அருகே உள்ள கருவேலம்பட்டி பகுதியில் அரசின் அனுமதியின்றி நடத்தப்படும் கல்குவாரியில் இருந்து வெளிவரும் தூசியினால் அப்பகுதியிலுள்ள விவசாய நிலத்திற்கு பாதிப்பு ஏற்படுவதாக கூறி அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் பல்வேறு போராட்டங்கள் நடத்தியதோடு துறை ரீதியாக புகார் அளித்தனர். இதையடுத்து குவாரி செயல்பட அனுமதி ரத்து செய்யப்பட்டது இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட கருவேலம்பட்டியைச் சேர்ந்த ராமன் என்ற இளைஞர் மீது ஆஸ்டின்பட்டி காவல்துறை கடந்த சில தினங்களுக்கு முன்பாக தனக்கன்குளம் பகுதியில் நடைபெற்ற கொலை வழக்கில் தொடர்புடையதாகக் கூறி ஆஸ்டின்பட்டி காவல்துறை தரப்பில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் பெயர் இணைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தனது கணவர் மீது மேற்கண்ட கல்குவாரியின் உரிமையாளர் மற்றும் அதிமுக பிரமுகர் பாரி என்பவர் தூண்டுதலின் பெயரில் ஆஸ்டின்பட்டி காவல்துறையினர் பொய் வழக்கை பதிவு செய்து மிரட்டுவதாகவும், தனது கொழுந்தனாரின் மனைவி கர்ப்பிணியாக உள்ளதால் பிரசவத் தேவைக்கு மருத்துவமனைக்கு செல்வதற்காக வீட்டில் நிறுத்தி வைத்திருந்த காரை காவல்துறையினர் எடுத்துச் சென்றதாகவும், குவாரிக்கு எதிரான போராட்டத்தை கைவிட்டால் வழக்கை ரத்து செய்வதாக கூறி தொடர் மிரட்டல் வருவதால் பொய் வழக்கில் இருந்து தனது கணவர் பெயரை நீக்க கோரியும் சம்பந்தப்பட்ட ஆஸ்டின்பட்டி காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் ராமனின் மனைவி சிவகுமாரி மதுரை மாவட்ட ஆட்சித் தலைவரிடம் புகார் மனு அளித்தனர்.அதிமுக பிரமுகர் மீது பெண் அளித்த புகாரால் அதிமுக கட்சியினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியதோடு மட்டுமில்லாமல் பொதுப் பிரச்சனைக்காக போராடுபவர்களை அச்சுறுத்தும் விதமாக பொய் வழக்குகளை புனையும் போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனித உரிமை ஆர்வலர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

error: Content is protected !!