பஸ் ஸ்டாப்பில் நின்றுகொண்டிருந்தவர்களை போதையில் இருந்த இளைஞர்கள் தாக்கி வெட்டிய வீடியோ காட்சிகள்!

வளையங்குளம் அருகே பஸ் ஸ்டாப்பில் நின்று கொண்டிருந்த அண்ணன் தம்பியை பைக்கில் வந்த மூவர் வெட்டி தப்பிச் சென்றனர்
பெருங்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா வலையங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் ஊமை இவரது மகன் திருமண் வயது (35) அழகுராஜா (வயது 37) இவர்கள் இருவரும் இன்று மாலை வலையங்குளம் பஸ் ஸ்டாப் அருகே நின்று கொண்டிருந்தபோது

வலையங்குளம் பெருமாள் நகர் பகுதியைச் சேர்ந்த மூவர் பைக்கில் வந்தனர். திடீரென பஸ் ஸ்டாப்பில் நின்று கொண்டிருந்த திருமண், அழகுராஜா இருவரையும் அரிவாளால் சரமாரியாக வெட்டியதில் இருவரும் பலத்த காயம் அடைந்து மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
வலையங்குளம் பகுதியில் வாலிபர்களை வெட்டிய செய்தியால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து
சம்பவ இடத்திற்கு திருமங்கலம் டிஎஸ்பி வசந்தகுமார் பெருங்குடி ஆய்வாளர் லெஷ்மி லதா ஆகியோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

.

செய்தியாளர் வி.காளமேகம் – மதுரை மாவட்டம்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!