நிலையூர் கண்மாயில் மூழ்கி ஒருவர் பலி!

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே உள்ள நிலையூர் கன்மாயில் கூத்தியார்கூண்டு பகுதியில் மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியை சேர்ந்த காசி என்பவர் குளிக்க சென்றுள்ளார். அப்பொழுது எதிர்பாராத விதமாக ஆழமான பகுதியில் சிக்கிக் கொண்டார். குளிக்க சென்றவர் நீண்ட நேரமாக வராததைக் கண்ட அவரது உறவினர்கள் கத்திக் கூச்சலிட்டனர். நீண்ட நேரம் கூச்சிலிட்ட பிறகும் காசி அவர்கள் தண்ணீருக்கு மேல் வராமல் இருந்த நிலையில் உறவினர்கள் அச்சமடைந்தனர்.

பின்னர் என்ன செய்வதென்று அறியாத உறவினர்கள் திருப்பரங்குன்றம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். திருப்பரங்குன்றம் தீயணைப்பு நிலைய அலுவலர் உதயகுமார் தலைமையிலான தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர் இரவு நேரம் எனும் பாராமல் உடலை தேடும் பணியில் நிலையூர் கண்மாய் கூத்தியார்குண்டு பகுதியில் மீட்பு பணியில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேரம் தேடுதலுக்கு பிறகு காசியின் உடல் கிடைக்கப்பெற்றது.

அவரது உடலை தீயணைப்புத் துறை வீரர்கள் கைப்பற்றி ஆஸ்டின் பட்டி காவல் நிலைய சார்பு ஆய்வாளர் சிவலிங்கத்திடம் ஒப்படைத்தனர். இதைத் தொடர்ந்து காசியின் உடல், உடல் கூராய்வு பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!