2021 தேர்தல்:நாம் தமிழர் கட்சி சார்பாக திருச்சுழியில் கலந்தாய்வு கூட்டம்.

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தொகுதியில் இன்று ஒன்றிய
கலந்தாய்வுகூட்டம் நடைபெற்றது.

2021ல் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி கடந்த தேர்தல்களைப் போல யாருடனும் கூட்டணி இல்லாமல் 234 தொகுதிகளிலும் தனித்தே போட்டியிடும் என அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்திருந்தார்.

இதில் 117 ஆண் வேட்பாளர்கள் 117 பெண் வேட்பாளர்களை களம் இறக்குகிறார்கள்.

234 தொகுதிகளில் பல்வேறு தொகுதிகளில் வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு தேர்தல் பணி குறித்து 234 தொகுதிகளிலும் ஆலோசனை கூட்டம் மற்றும் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்று தேர்தல் களப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து இன்று விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தொகுதியில் வருகின்ற சட்டமன்ற தேர்தல் பணி குறித்து கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டம் வடக்கு ஒன்றியச் செயலாளர் போ.ராசேசுக்குமார் மற்றும்
தெற்கு ஒன்றியச் செயலாளர்
ஜோதிலிங்க கருப்பசாமி ஆகியோரின் தலைமையிலும்,
திருச்சுழி தொகுதி துணைத்தலைவர் போ.முனியசாமி முன்னிலையிலும் நடைபெற்ற இக்கலந்தாய்வுக் கூட்டத்தில் தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் ஒன்றிய பொறுப்பாளர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

error: Content is protected !!