கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு – வானிலை மையம் அறிவிப்பு.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென்தமிழக கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் அடுத்த இரு நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் டிச., 28 முதல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென்தமிழக கடலோர மாவட்டங்கள், நாகை மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.டிச., 29 மற்றும் 30ல் கடலூர், தஞ்சை, திருவாரூர் நாகப்பட்டிணம் உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும். அடுத்த 48 மணி நேரத்தில் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. ஏனைய மாவட்டங்களில் வறண்ட வானிலையே நிலவும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

error: Content is protected !!