
திருப்பரங்குன்றம் அருகே மனைவி கண்டித்ததால் கணவர் தற்கொலை
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே கூத்தியார்குண்டு காளியம்மன் கோயில் தெருவை சேர்ந்த கதிர்வேல் மகன் பாலமுருகன்( 31) என்பவர் அவரது மனைவி காளீஸ்வரி குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு கண்டித்து திட்டியுள்ளார். இதனால் மனமுடைந்த பாலமுருகன் 28ஆம் தேதி இரவு கல்லுமடையன் கோவில் அருகே விஷம் அருந்தி மயங்கிய நிலையில் இருந்துள்ளார்.
இதனை அறிந்த காளீஸ்வரி அவரை மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் உயிரிழந்தார். இது குறித்து அவரது மனைவி ஆஸ்டின்பட்டி காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.