ஆபத்தான முறையில் பயணம் செய்த த.வெ.க கட்சியினர்.

ஆபத்தான முறையில் பயணம் செய்த த.வெ.க கட்சியினர்.

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே நேற்று (டிச.1) தமிழக வெற்றி கழகம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு சோழவந்தான் வாடிப்பட்டி, அலங்காநல்லூர், பாலமேடு ஆகிய பகுதிகளில் இருந்து தமிழக வெற்றிக்கழக தொண்டர்கள் குவிந்தனர்.

இதில் சோழவந்தான் பகுதியில் இருந்து வந்த தொண்டர்கள் ஜெனகை மாரியம்மன் கோவில் முன்பு ஒன்று கூடி அங்கிருந்து புறப்பட்டு பொதுக்கூட்டத்திற்கு செல்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த நிலையில் டாட்டா ஏசி டெம்போ வேன் உள்ளிட்ட வாகனங்களில் அதிக அளவில் தொண்டர்கள் ஆபத்தை உணராமல் கூட்டத்திற்கு சென்றனர் குறிப்பாக டாட்டா ஏசி வண்டியில் 50-க்கும் மேற்பட்டோர் அடைத்துக் கொண்டு சென்றது பொது மக்களை அதிர்ச்சி அடைய செய்தது.

சிறிய விபத்து ஏற்பட்டாலும் பெருமளவு உயிர் சேதம் ஏற்படும் நிலையில் கட்சி தலைமை இதுபோன்று தொண்டர்கள் வருவதற்கு அனுமதி அளிக்கக்கூடாது. அப்படி வருவபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!