மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டத்தை திரும்பப் பெறக்கோரி மதுரை மேற்கு மாவட்டம் சார்பாக திருமங்கலம் தொகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்ட மசோதாக்களுக்கு நாடு முழுவதும் பரவலாக எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில், இந்த மசோதாக்களை எதிர்த்து தமிழ்நாடு முழுவதும் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் அக்கட்சியினரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து மாநில ஒருங்கிணைப்பாளர் செ.வெற்றிக்குமரன் அவர்களின் அறிவுறுத்தளின் படி மதுரை மண்டலச் செயலாளர் செங்கண்ணன் அவர்கள் தலைமையில், மதுரை மேற்கு மாவட்டத் தலைவர் ராஜா,மேற்கு மாவட்ட செயலாளர் மகாதேவன்,திருமங்கலம் தொகுதி செயலாளர் நாகராஜன் ஆகியோரது முன்னிலையிலும் மதுரை மாவட்டம் திருமங்கலம் வெளியூர் பேருந்து நிலையம் அருகில் அக்கட்சியின் மேற்கு மாவட்டம் சார்பாக வேளாண் மசோதா சட்டத்தை உடனடியாக திரும்பபெற வலியுறுத்தி டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக ‘விவசாயத்தை தனியார் மயம் ஆக்காதே’ , ‘சாகுபடி செய்பவர்களை சாகடிக்காதே’ என பதாகைகள் ஏந்தியபடி
கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாநில கொள்கைபரப்பு செயலாளர் அருண் ஜெயசீலன் கண்டனவுரை ஆற்றினார். இதில் மதுரை மண்டலம் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
இது போன்ற செய்திகளை உடனுக்குடன் பெற கீழே உள்ள படத்தை கிளிக் செய்து குழுவில் இணையவும் .