இன்று முதல் அரசு பஸ் ஊழியர்கள் ஸ்டிரைக்.. ?

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் 1 லட்சத்து 42 ஆயிரம் ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனார். இவர்களுக்கான ஊதிய ஒப்பந்தம் கடந்த 2019 ஆகஸ்ட் மாதத்துடன் முடிவடைந்தது. தொடர்ந்து 2019 அக்டோபர் 1 முதல் 14 வது ஊதிய ஒப்பந்தம் அமலுக்கு வந்திருக்க வேண்டும். ஆனால், தமிழக அரசு 18 ந் மாதங்களாகியும் அதற்கான பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை. தொடர்ந்து காலம் தாழ்த்தி வருவதாக போக்குவரத்து தொழிலாளர்கள் புகார் தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் தமிழகம் முழுவதும் கடந்த ஜனவரி மாதம் காத்திருக்கும் போராட்டம் நடந்தது.

ஏற்கனவே அறிவித்தபடியும் கடந்த ஜனவரி மாதம் தொழிற்சங்கத்தை சேர்ந்த 2500 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் சென்னை பல்லவன் சாலையில் மாநகர போக்குவரத்து தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அப்போது அவர்கள் தங்கள் கோரிக்கைகளை மனுவாக தயாரித்து அதை நிர்வாக இயக்குனருக்கு கொடுத்தனர்.

இதில் திமுகவின் தொமுச, சிஐடியூ,
ஐஎன்டியுசி,
எஸ்டிடியு, ஏஐடியுசி, உள்ளிட்ட 12 தொழிற்சங்கங்களை சேர்ந்த தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் இன்று நடைபெற்றும் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத பட்சத்தில்
பிப்ரவரி 18ம் தேதி மாநிலம் தழுவிய ஸ்டிரைக் நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக 6 மாதங்கள் முன்னதாகவே தொழிற்சங்கங்கள் சார்பில் வேலைநிறுத்த நோட்டீஸ் கொடுத்தனர்.

இந்நிலையில் இன்று பிப்ரவரி 18 தேதி நடைபெறும் பேச்சுவார்த்தையில்
அரசு செவி சாய்க்காதபட்சத்தில்
இன்று மாலை 4 மணியளவில் பஸ் ஊழியர்கள் ஸ்டிரைக் ஆரம்பமாகும் என தகவல் வருகிறது.

பொதுமக்கள் உரிமைக்காக போராடும் பஸ் ஊழியர்களுக்கு ஆதரவு அளியுங்கள் மற்றும் இன்று ஸ்டிரைக் நடைபெறும் பட்சத்தில் முன்கூட்டியே உங்கள் பயண நேரத்தை மாற்றி அமைத்து கொள்ளுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!