திருப்பரங்குன்றம் அருகே அவனியாபுரத்தில் தமிழ்நாடு டூரிஸ்ட் கார் ஓட்டுனர்கள் நலச்சங்கம் சார்பில் விடியலை நோக்கி மாநாடு நடைபெற்றது
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா அவனியாபுரம் அருகே தனியார் மஹாலில் தமிழ்நாடு டூரிஸ்ட் டாக்ஸி ஓட்டுனர்களின் நலச்சங்கம் சார்பில் விடியலை நோக்கி மாநாடு நடைபெற்றது.
மாநில துணைச் செயலாளர் ரமேஷ்குமார் முன்னிலை வகித்தார்.
துணைத்தலைவர் சாரதி வரவேற்புரை கூறினார் மாநிலத் தலைவர் கண்ணாயிரம் மூர்த்தி விழாவிற்கு தலைமை வகித்தார் மாநில பொதுச் செயலாளர் திருப்பூர் வெங்கட் சிறப்புரையாற்றினார் விழாவில் ஓட்டுநர்களின் நலம் பாதுகாப்பது குறித்து 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
அதில்
1,அண்டை மாநிலங்களான கேரளா ,கர்நாடகா, ஆந்திரா, பாண்டிச்சேரியில் சீட் பெர்மிட் வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு இதேபோல் வழங்க வேண்டும் எனவும்
- இன்சூரன்ஸ் தொகை உயர்த்தி உள்ளனர் அதை குறைக்க வேண்டும் 3 சுங்க சாவடிகளில் வசூலிக்கப்படும் சுங்கவரி கட்டணங்களில் டோல்கேட் சுங்கச்சாவடிகளில் முறையான கழிப்பிட வசதி ,தங்கும் வசதி எதுவும் இல்லை இதனை சீரமைக்க
- தமிழகம் முழுவதும் ஒரே மாதிரியான வாடகை நிர்ணயம் செய்வது உள்ளிட்ட ஆறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது தமிழக அரசு விரைந்து நடவடிக்கை வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். தீர்வு காணாவிடில் சட்டப் போராட்டம் தொடரும் எனவும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர் இதேபோல் மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியான அபதாரத் தொகையை விதிக்க வேண்டும் என்றும் சில இடங்களில் கூடுதலாக அபதாரத்தை விதிப்பதால் குழப்பம் ஏற்பட்டது என்றும் குறிப்பிட்டுள்ளனர்
விழாவில் தமிழகம் முழுவதும் இருந்து டூரிஸ்ட் கார் ஓட்டுநர்கள் உரிமையாளர்களும் 600 பேர் கலந்து கொண்டனர் .
மேலும் கேரளா, கர்நாடகா, ஆந்திரா, பாண்டிச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து பிரதிநிதிகள் கலந்துகொண்டு கலந்து கொண்டனர்.