தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் மற்றும் துடிசியா இணைந்து நடத்தும் தொழில் மாதிரி மற்றும் தொழில் திட்ட அறிக்கை தயாரித்தல் பயிற்சி தூத்துக்குடி துடிசியாவில் பிப்ரவரி 25-ம் தேதி துவங்குகிறது.
இப்பயிற்சியில் தொழிலின் வகைகள், தொழிலை தேர்ந்தெடுக்கும் முறைகள், தொழில் திட்ட அறிக்கை தயாரித்தல், அரசு மானியத்துடன் கூடிய வங்கிக்கடன் பெறும் வழிமுறைகள், வங்கியின் எதிர்பார்ப்புகள், தொழில் துவங்க தேவையான அரசு பதிவுகள், சந்தை ஆய்வு, வெற்றி பெற்ற தொழிலதிபர்களிடம் மற்றும் அரசு உயர் அதிகாரிகளிடம் நேரடியாக கலந்துரையாடல், சிறுதொழில் வளர்ச்சிக்கு உதவும் நவீன தொழில் நுட்பங்கள் போன்றவை நடத்தப்பட உள்ளன.
இப்பயிற்சியில் 18 வயது நிரம்பிய 8-ம் வகுப்பு முடித்த தொழில் ஆர்வம் உள்ள ஆண்-பெண் இருபாலரும் சேரலாம். பயிற்சி 25.02.2021 துவங்கி 03.03.2021 வரை 5 நாட்கள் காலை 10.00 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். பயிற்சிக் கட்டணம் ரூ.700/- மட்டும். முதலில் வரும் 30 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். பயிற்சி நடைபெறும் இடம்: தூத்துக்குடி மாவட்ட சிறு தொழில் சங்கம் (துடிசியா), 4/158, ராம் நகர் (கேடிசி டிப்போ அருகில்), எட்டையபுரம் ரோடு, தூத்துக்குடி-2.
பயிற்சியின் இறுதியில் வழங்கப்படும் சான்றிதழை பெற்றுக்கொண்டு அரசு திட்டங்களான UYEGP & PMEGP திட்டங்களின் கீழ் ரூ.25 லட்சம் வரை 25சதவீத மானியத்துடன் (விளிம்புத்தொகை: 10%+) வங்கிக்கடன் பெற்று புதிதாக தொழில் தொடங்க வாய்ப்புள்ளது. பயிற்சி முன்பதிவுக்கும் மற்றும் தகவலுக்கும் துடிசியா அலுவலகத்தில் அல்லது தொலைபேசி எண் 9791423277 / 9843878690-ல் தொடர்பு கொள்ளலாம். இந்தத் தகவலை துடிசியா பொதுச்செயலாளர் ராஜ் செல்வின் தெரிவித்துள்ளார்.