மீனவர்கள் போராட்ட அறிவிப்பு..மீன்வள உதவி இயக்குனர் பேச்சுவார்த்தை.

கன்னியாகுமரி மீனவர்களின் போராட்ட அறிவிப்பை தொடர்ந்து மீன்வளத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடந்தது.


கன்னியாகுமரி பெரியநாயகிதெருவில் தூண்டில்வளைவு அமைப்பதற்காக ஆய்வுபணிகள் செய்தும் பணிதொடங்க காலதாமதமாகிவருகிறது.
இந்த பணிகளை
வரும் 21 அன்று தொடங்காவிட்டால் 22 ம் தேதி போராட்டம் நடத்தி அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்றும், மேலும் காலதாமதம் ஆகும் நிலையில் காலவரையற்ற தொடர் வேலைநிறுத்தம் மற்றும் தொடர் போராட்டம் நடத்துவது என்றும் தீர்மானம்செய்யப்பட்டது.
இந்நிலையில் கன்னியாகுமரி மீன்வளத்துறை உதவிஇயக்குனர் ராஜதுரை, கன்னியாகுமரி டிஎஸ்பி பாஸ்கரன்,அகஸ்தீஸ்வரம் தாசில்தார் சுசீலா, கடலரிப்பு தடுப்பு கோட்ட உதவி பொறியாளர் விஜயகுமார் மற்றும் மீனவர்கள் சார்பில் கன்னியாகுமரி தூய அலங்கார உபகாரமாதா திருத்தல பங்குபேரவை துணைதலைவர் நாஞ்சில்மைக்கேல் மற்றும் பங்குபேரவை உறுப்பினர்கள், மீனவர்கள் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் அரசுதரப்பில் துண்டில்வளைவு அமைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததையடுத்து மீனவர்கள் போராட்டம் விலக்கிகொள்ளப்பட்டது.

Leave a Reply

error: Content is protected !!