கொரோனா நோய்த்தொற்று இரண்டாம் அலை பரவி வரும் சூழ்நிலையில் தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதை தொடர்ந்து மதுரை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் படுக்கை வசதி குறைவாக இருந்ததை அடுத்து மதுரை தோப்பூரில் உள்ள காசநோய் பிரிவு மருத்துவமனை அருகே கூடுதலாக 500 படுக்கைகள் வசதி கொண்ட தற்காலிக கட்டிடத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் திறந்துவைத்தார்.
மேலும் மதுரையில் கொரோனா நோய்த்தொற்றை தடுக்கும் விதமாத பல்வேறு பிரிவுகளில் பணிபுரியும் வாய்ப்பை மதுரை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. மதுரை மாவட்டத்தில் கீழ்காணும் அரசு மருத்துவமனைகளுக்கு கொரோனா தொற்று சிகிச்சை பிரிவில் பணிபுரிய விருப்பமுள்ள
- மருத்துவர்கள்,
- செவிலியர்கள்,
- ஆய்வக நுட்புனர்,
- கணினி உதவியாளர்,
- பல்நோக்கு சுகாதார பணியாளர்கள்,
போன்ற பணிகளுக்கு தங்களது விண்ணப்பத்துடன் கல்வி சான்றிதழ்கள் இதர சான்றிதழ்கள் முன் அனுபவ சான்றிதழ்களுடன் மதுரை மாவட்ட நலப்பணிகள் இணை இயக்குனர் தற்காலிக அலுவலகம்,மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (கூடுதல் கட்டடம்) வளாகம் மூன்றாவது தளத்தில் நேரடியாக சமர்ப்பிக்குமாறு பத்திரிக்கை செய்தி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

இந்த வாய்ப்பை பயன்படுத்தி விண்ணப்பித்துக்கொள்ளுமாறு மதுரை மாவட்ட நலப் பணிகள் துறை சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது.
Data Entry Operator