கொரோனா பரவலை கட்டுப்படுத்த அமெரிக்காவில் வரும் ஜூலை 4-ஆம் தேதி அமெரிக்க சுதந்திர தினத்திற்குள் 70 சதவீத மக்களுக்கு குறைந்தபட்ச ஒரு டோஸ் தடுப்பூசியாவது செலுத்த வேண்டும் என்ற இலக்கை அதிபர் பைடன் அரசு செயல்பட்டுவருகிறது. தற்போது வரை 63 சதவீதம் பேர் ஒரு டோஸ் தடுப்பூசியாவது செலுத்திக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தடுப்பூசி செலுத்த மக்களை ஊக்குவிக்க புதிய முறையை அமெரிக்க மதுபான தயாரிப்பு நிறுவனமான Anheuser-Busch கையாண்டு உள்ளது. அதன்படி குறிப்பிட்ட நாளுக்குள் தடுப்பூசி இலக்கு அடையப்பட்டால் 21 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இலவசமாக பீர் வழங்குவதாக அறிவித்து உள்ளது.
அதேபோல் தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்களின் குழந்தைகளை பார்த்துக் கொள்ள 4 முன்னணி குழந்தைகள் பராமரிப்பு நிறுவனம் முன்வந்துள்ளது. மேலும் நாடு முழுவதும் துணை அதிபர் கமலா ஹாரிஸ் தடுப்பூசி பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.