மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கீழமாத்தூர் ஊராட்சி வலைய தெரு வார்டுக்கு உட்பட்ட அஷ்டலட்சுமி நகருக்கு செல்லும் சாலை சேறும் சகதியுமாக நாற்று நட தயார் நிலையில் இருப்பதாக இப்பகுதி பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இந்த சாலையை செப்பணியிட்டு தரக்கோரி பலமுறை புகார் அளித்தும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் புகார் தெரிவிக்கின்றனர். இது கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூஅவர்களின் மதுரை மேற்கு தொகுதிக்குட்பட்ட பகுதி என்பது குறிப்பிடத்தக்கது.அமைச்சர் செல்லூர் ராஜூவின் தொகுதியான இப்பகுதியில் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.