மதுரை-விருதுநகர் நான்குவழிச்சாலையில் கூத்தியார்குண்டு சந்திப்பில் உயர் கோபுர மின்விளக்கு அமைக்கப்பட்டிருந்தது. கடந்த வெள்ளிக்கிழமை இரவு மின்விளக்கு மீது லாரி மோதியதில் விளக்கு அமைக்கப்பட்ட பீடம் சேதமடைந்து, கீழே விழும் நிலையில் இருந்தது.அதை அப்புறப்படுத்தி நான்குவழிச் சாலை நிர்வாகத்தினர் ரோட்டின் ஓரத்தில் வைத்துள்ளனர்.
ஏழு நாட்களாக அப்பகுதி இரவில் இருளில் மூழ்கியுள்ளது. கூத்தியார்குண்டு முதல் எம்ய்ஸ் மருத்துவமனை அமைக்க தேர்வு செய்யப்பட்டுள்ள இடம் வரை நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது.
கப்பலூர் சிட்கோ தொழிலாளர்கள் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதி வாழ் மக்கள் அனைவருக்கும் பிராதானமாக விளங்குவது கூத்தியார்குண்டு சந்திப்புதான் அங்கிருந்து வரும் வாகனங்களும் பாதசாரிகளும் ரோட்டை கடக்க முடியாமல் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றன.
தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சந்திப்பில் உயர் கோபுர மின்விளக்கை தகுந்த பாதுகாப்பு வசதிகளுடன் அமைக்க முன்வரவேண்டும் அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டுநர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.