2021 சட்டமன்றத் தேர்தல்- அமமுக சார்பில் குழுக்கள் அமைப்பு..

சட்டமன்றத் தேர்தல் பணிகளுக்கான ஆய்வு மற்றும் தேர்தல் அறிக்கை குறித்த கருத்து கேட்பதற்காக அமமுக சார்பில் குழுக்கள் அமைக்கப்பட்டு நவம்பர் 27ஆம் தேதி முதல் அக்குழுவினர் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளனர்.

இந்த சூழலில் அமமுகவின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வருகிற தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலை ஒட்டி கழகத்தின் சார்பில் அந்தந்த மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு இருக்கும் பணிகளை ஆய்வு செய்வதற்கும் கழகத்தின் சார்பில் வெளியிட உள்ள தேர்தல் அறிக்கை குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்பதற்காக கழகத்தின் சார்பில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழுவினர் வரும் நவம்பர் 27ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கின்றனர்” எனக் குறிப்பிட்டுள்ளார். அமமுக சார்பில் யாரெல்லாம் இக்குழுவில் இடம் பெற்றுள்ளார்கள் என்ற பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.

https://wa.me/message/5ZNFDVUGHX5OK1

Leave a Reply

error: Content is protected !!