அஞ்சுகிராமம் தொழிலதிபருக்கு
குமரி மாவட்ட சிறுபான்மையினர் கூட்டமைப்பு சார்பில் வாழ்நாள் சாதனையாளர் விருது.
பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் பாராட்டு.
கன்னியாகுமரி மாவட்டம்
அஞ்சுகிராமத்தைச் சார்ந்தவர்
தொழிலதிபர் செய்யது அப்துல் ரஹீம். இவர் ஜாதி மதம் பாராமல் எல்லோரிடமும் இனிமையாகவும், அன்பாக பழகுபவர். இல்லை என வந்தவர்க்கு இல்லை என சொல்லாமல் எப்போதும் சிரித்த முகத்துடன் உதவிகள் செய்பவர். அள்ளிக் கொடுத்து வாழ்பவன் நெஞ்சம் ஆனந்தப் பூந்தோப்பு என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப வாழ்ந்து வருபவர். இவர் கடந்த கொரானா காலகட்டத்தில் ஏழை எளிய மக்களுக்கு இலவச அரிசி, காய்கறி, முக கவசம் உள்ளிட்ட ஏராளமான நலத்திட்ட உதவிகள் மற்றும் பொது சேவைகளை செய்துவந்தார். இவரின் பொதுச் சேவையை பாராட்டி உலக சிறுபான்மையினர் தினத்தை முன்னிட்டு குமரி மாவட்ட சிறுபான்மையினர் கூட்டமைப்பு சார்பில் தொழிலதிபர் செய்யது அப்துல் ரஹீமுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. அவருக்கு பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்தனர்.
அவருடன் குமரி மாவட்ட சிறுபான்மையினர் கூட்டமைப்பு பொதுச் செயலாளர் மீரான்மைதீன், தலைவர் அருட்பணி ஞானதாசன், முன்னாள் கோட்டார் மறைமாவட்ட பேராயர் பீட்டர் ரெமியுஜீஸ், பிஷப்கள் மரியாஜ் இம்மானுவேல், கூட்டமைப்பு துணைச் செயலாளர் சம்சுதீன் ஆகியோர் அருகில் உள்ளனர்.