குமரியின் சபரிமலை ஐயப்பன் கோவில் மண்டல பூஜையில் குவிந்த பக்தர்கள்.

குமரியின் சபரிமலை
பொட்டல்குளம்
அருள்மிகு குபேர ஐயப்ப சுவாமி கோவிலில் மண்டல பூஜை விழா. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் பங்கேற்பு
.

கன்னியாகுமரி மாவட்டம் பொட்டல்குளம் குமரியின் சபரிமலை அருள்மிகு குபேர ஐயப்ப சுவாமி கோவில் மண்டல பூஜை விழா நடைபெற்றது. தற்போது கொரானா எதிரொலி காரணமாக கேரளாவின் சபரிமலைக்கு செல்ல இயலாத தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சார்ந்த ஏராளமான ஐயப்ப பக்தர்கள் தினமும் இக்கோயிலுக்கு வந்த வண்ணம் இருந்து வருகிறார்கள்.

மேலும் கேரளா சபரிமலையில் இருப்பது போன்ற அனைத்து விதமான அம்சங்களும் இங்கே நிறைந்திருப்பதால் பக்தர்கள் மகிழ்ச்சியுடன் இங்கே வந்து அங்கே செய்யப்படுகின்ற அனைத்து விதமான நடைமுறைகளையும் செய்து நெய்யபிஷேகம், படித்தேங்காய் உடைத்தல் உள்ளிட்ட அனைத்து விதமான வழிபாட்டு முறைகளையும் செய்து வழிபட்டு இறை அருள் பெற்று, மன நிறைவுடன் செல்கின்றனர். அந்த வகையில் ஐயப்ப சுவாமி கோவிலில் நடைபெற்ற மண்டல பூஜை விழாவில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சார்ந்த ஏராளமான ஐயப்ப பக்தர்கள் மண்டல பூஜை விழாவில் பங்கேற்று வழிபாடு செய்தனர்.

விழாவை முன்னிட்டு காலை 5 மணிக்கு கணபதி ஹோமம், 9:00 மணிக்கு அஷ்டாபிஷேகம் காலை 10 மணி முதல் நண்பகல் 12:00 மணி வரை ஐயப்ப சுவாமிக்கு நெய்யபிஷேகம் நடைபெற்றது.


தொடர்ந்து 12:30 அலங்கார தீபாராதனை, உச்சிகால பூஜை நடைபெற்றது. பகல் 1 மணிக்கு மாபெரும் அன்னதானம் நடைபெற்றது.பின்னர் மாலை ஐந்து முப்பது மணிக்கு திருவிளக்கு பூஜையும், இரவு 9 மணிக்கு பூக்குழி பூஜையும் தொடர்ந்து இரவு 10 மணிக்கு அத்தாள பூஜையும் நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கலப்பை மக்கள் இயக்கம் தலைவர்
பிடி செல்வகுமார், சட்ட ஆலோசகர் வக்கீல் பாலகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

விழாவிற்கான ஏற்பாடுகளை நிறுவனர் சித்தர் தியாகராஜ சுவாமிகள், நிர்வாகிகள் ஐயப்பன், முத்தமிழ்ச் செல்வன் மற்றும் ஸ்ரீ விசுவாமித்திரர் சைவ சபா உழவாரப்பணி தொண்டர்கள் மற்றும் கலப்பை மக்கள் இயக்க நிர்வாகிகள், பக்தர்கள் செய்திருந்தனர்.

Leave a Reply

error: Content is protected !!