கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட, செண்பகராமன்புதூர், இறச்சகுளம், ஈசாந்திமங்கலம் ஆகிய ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.6.35 கோடி மதிப்பில் பல்வேறு திட்டப்பணிகளுக்கு, தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி தளவாய் சுந்தரம் அடிக்கல் நாட்டி, பணிகளை துவக்கி வைத்தார்.
தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி தளவாய் சுந்தரம் கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட செண்பகராமன்புதூர், இறச்சகுளம், ஈசாந்திமங்கலம் ஆகிய ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.6.35 கோடி மதிப்பில் பல்வேறு திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பணிகளை துவக்கி வைத்தார்.
தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி தளவாய் சுந்தரம் கன்னியாகுமரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் நிதியிலிருந்து ரூ.1 கோடி மதிப்பில், நாகர்கோவில் ஆவின் தலைமை அலுவலக வளாகத்தில், புதிதாக கட்டப்படவுள்ள பல்நோக்கு கூட்டரங்கத்திற்கு அடிக்கல் நாட்டினார்.
தோவாளை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதியில், ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய சாலைகள், இதர மாவட்ட சாலையாக தரம் உயர்த்துதல் திட்டத்தின்கீழ், ரூ.3.28 கோடி மதிப்பில் தாழக்குடி முதல் தோவாளை வரை புதிய தார் சாலை அமைக்கும் பணியினை துவக்கி வைத்தார்.
மேலும், செண்பகராமன்புதூர் ஊராட்சிக்குட்பட்ட, செண்பகராமன்புதூர் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி, அரசு ஆரம்ப பள்ளியில் நபார்டு திட்டத்தின்கீழ், ரூ.1.32 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்படவுள்ள கூடுதல் வகுப்பறை கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டினார்.
அதனைத்தொடர்ந்து, இறச்சகுளம் பால் உற்பத்தியாளர் சங்கத்தின் நிதியிலிருந்து ரூ.15.27 இலட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்படவுள்ள சங்க அலுவலக கட்டிடத்திற்கும், தோவாளை ஊராட்சி ஒன்றியம், ஈசாந்திமங்கலம் ஊராட்சி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின்கீழ், ரூ.60 இலட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்படவுள்ள ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு கட்டிடம் என ஆக மொத்தம் ரூ.6.35 கோடி மதிப்பில் பல்வேறு திட்டப்பணிகளுக்கு, தளவாய் சுந்தரம் பூமிபூஜை மேற்கொண்டு, அடிக்கல் நாட்டி, பணிகளை துவக்கி வைத்தார்.
நடைபெற்ற நிகழ்ச்சிகளில், மாவட்ட ஆவின் பெருந்தலைவர் அசோகன், முன்னாள் அமைச்சர் கே.டி.பச்சைமால், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கபீர், ஆவின் பொதுமேலாளர் தங்கமணி, தோவாளை ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் சாந்தினி பகவதியப்பன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் ஜாண்சிலின் விஜிலா, பரமேஸ்வரன், தோவாளை ஊராட்சி ஒன்றிய துணைத்தலைவர் ஷேக் ஊராட்சி மன்றதலைவர்கள் கல்யாணசுந்தரம் , நீலகண்ட ஜெகதீஷ், கிருஷ்ணகுமாரி உட்பட பலர் கலந்து கொண்டன