கன்னியாகுமரி மாவட்ட சி.ஐ.டி.யு. ஆட்டோ மோட்டார் சங்கத்தினர் சார்பில் பெட்ரோல், டீசல், கேஸ் விலையை படமடங்கு உயர்த்திய பாஜக அரசை கண்டித்தும், விலையை குறைக்க வலியுறித்தியும் வேப்பமூடு மாநாகராட்சி பூங்கா முன்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கன்னியாகுமரி மாவட்ட சி.ஐ.டி.யு. ஆட்டோ மோட்டார் சங்கத்தினர் நாகர்கோவில் வேப்பமூடு மாநாகராட்சி பூங்கா முன்பு மத்திய பாஜக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சர்வதேச சந்தையில் கச்சா உள்ளிட்ட எரிப்பொருட்களின் விலை பெருமளவு குறைந்த போதும் கூட இந்தியாவில் மட்டும் பெட்ரோல் டீசல், கேஸ் விலை படமடங்கு உயர்த்தி உள்ள மத்திய பாஜக அரசை கண்டித்தும், விலை குறைக்க வலியுறித்தியும், கோஷங்களுடன் ஆர்பாட்டம் செய்தனர்.
கடத்த 2016 ல் தேர்தல் பிரச்சாரத்தின் போது ஒரு லிட்டர் பெட்ரோல் 50 ரூபாய்க்கு வழங்க படும் என கூறி ஆட்சிக்கு வந்த பிரதமர் மோடி இன்று அநியாய விலை உயர்வை செய்து உள்ளதற்கு போராட்டத்தின் மூலம் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.