மேஜர் ரவி இயக்கத்தில் சரத்குமார்

தமிழில் மோகன்லால், ஜீவா நடித்த ‘அரண்’ படத்தை இயக்கியவர் மேஜர் ரவி. மலையாளத்தில், காந்தஹார், மிஷன் 90 டேஸ், கர்மயோதா உட்பட பல படங்களை இயக்கியுள்ளார். ராணுவப் பின்னணியில் படங்களை இயக்கும் இவர், அடுத்து ‘ஆபரேஷன் ராஹத்’ என்ற படத்தை இயக்குகிறார்.

உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உருவாகும் இதில் சரத்குமார் நாயகனாக நடிக்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என ஐந்து மொழிகளில் இந்தப் படம் உருவாகிறது. இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ள மேஜர் ரவி, தென்னிந்தியாவில் இருந்து ஓர் இந்திய படம் என்று குறிப்பிட்டுள்ளார். சஞ்சின் ராஜ் இசை அமைக்கும் இந்தப் படத்துக்கு அர்ஜுன் ரவி ஒளிப்பதிவு செய்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!