மதுரை விமான நிலைய ஓடுதளத்தின் கீழே நான்குவழிச்சாலை (அண்டர் பாஸ் முறையில் ஓடுதளம்) அமைக்க வலியுறுத்தி மத்திய விமான போக்குவரத்து துறை செயலாளரிடம் மதுரை விமான நிலைய ஆலோசனைக் குழு தலைவர் ப.மாணிக்கம் தாகூர் M.P அவர்கள் நேரில் சென்று கடிதம் மூலம் கோரிக்கை வைத்தார்.
தமிழ்நாட்டின் பரபரப்பான விமான நிலையங்களில் ஒன்றான மதுரைக்கு வாரணாசி (காசி) விமான நிலையம்,மைசூர் விமான நிலையங்களை போல கீழே சாலையும் மேலே விமான ஓடுதளம் அமைக்கும் திட்டத்தை மதுரை விமான நிலையத்திலும் செயல்படுத்த வேண்டுமென்று எமது தலைமையிலான மதுரை விமான நிலைய ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
ஆனால் இத் திட்டத்திற்கு கூடுதல் நிதி செலவாகும் என்று இந்திய விமான நிலைய ஆணையம் மறுத்துவிட்டது இது தென் தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சிக்கு தடை போட்டது போல் ஆகிறது எனவே மாற்றாந்தாய் மனப்பான்மையை மத்திய அரசு கைவிட்டு மதுரை விமான நிலைய ஓடுதள விரிவாக்கத்தை அண்டர் பாஸ் முறையில் அமைக்க மாநில நெடுஞ்சாலைத்துறையுடன் இணைந்து நிதி ஒதுக்கீடு செய்து துரித நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று

தென்தமிழகத்தின் விமான பயணிகள் வசதி மற்றும் தொழில்துறை வளர்ச்சியை பொருத்தவரையில் மதுரை முக்கிய இடமாக உள்ளது என்பதை தாங்கள் அறிவீர்கள் எனவே எந்த ஒரு காலதாமதம் இல்லாமல் விரிவாக்க பணிகளை மேற்கொள்வது பொருத்தமானது இந்த தொகுதியின் மக்களவை உறுப்பினராக இருப்பதால் தமிழக போக்குவரத்துத் துறையின் முன் மொழிவை விரிவுபடுத்துவதற்கும் அதை விரைவாக முடிக்க தேவையான அனுமதியை வழங்குவதற்கும் இந்திய அரசின் சிவில் விமான ஆணையத்தை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன் என்று கடிதத்தில் கூறியுள்ளார்கள்.