வேளாண் சட்டங்களை ரத்து செய்யவும், மழையால் அழிந்துவிட்ட வேளாண் பயிர்களுக்கு உரிய நஷ்டஈடு கோரியும், டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவாகவும் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் 100க்கும் மேற்பட்டோர் திருச்சி கொள்ளிடம் பாலம் பகுதியில் டிராக்டரில் பேரணி மற்றும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அதேபோல் திருச்சி உழவர் சந்தையில் நடைபெற்ற இரு சக்கர பேரணியில் போலீஸ்காரர்களுக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.