மதுரை செல்லூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட வைகை ஆற்றுப்பகுதியில் உடல் மிதப்பதாக செல்லூர் போலீசாருக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த செல்லூர் காவல் உதவி ஆய்வாளர் ஜான் நேதாஜி ஆம்புலன்ஸ் ஹரி கிருஷ்ணன் தலைமையிலான குழுவினர் ஆற்றில் இறங்கி உடலை மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இவரது புகைப்படத்தை வைத்து அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடம் விசாரணை செய்தார்கள் எனும் அடையாளம் காணப்பட முடியவில்லை.

மது போதையில் கீழே விழுந்தாரா? அல்லது தவறி விழுந்தாரா? என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் இவரை பற்றிய விவரங்கள் தெரியும் பட்சத்தில் செல்லூர் காவல் நிலையத்தில் தவறு இருக்கலாம் என காவல்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.