நாளை சனி மகா பிரதோஷம். சிவன் கோவிலுக்கு இந்த 3 பொருட்களை வாங்கி கொடுத்தால், தீராத பெருந்துன்பங்கள் உடனே தீரும்.
சனி மகா பிரதோஷ வழிபாடு இந்த சனி மகா பிரதோஷம் மார்கழி 27ஆம் தேதி, ஆங்கில தேதியில் 11-1-2025 வரவிருக்கிறது. இந்த நாளில் சிவன் வழிபாடு அனைவரும் கட்டாயம் செய்ய வேண்டும். எதுவுமே செய்ய முடியாதவர்கள் கூட “ஓம் நமசிவாய” மந்திரத்தை சொல்லி வீட்டிலேயே பூஜை அறையில் எம்பெருமானை வணங்குவது சிறப்பான பலனை கொடுக்கும்
உங்கள் வீட்டு பக்கத்தில் சிவபெருமான் கோவிலிருந்தால் அந்த ஆலயத்திற்கு சென்று வழக்கம் போல வில்வ இலைகளை வாங்கி கொடுத்து உங்களுடைய வேண்டுதலை வையுங்கள். நந்தி தேவரை வணங்குங்கள். பிறகு சிவபெருமானை வணங்குங்கள். இந்த சிவபெருமான் ஒரு அபிஷேக பிரியர்
உங்கள் வீட்டு பக்கத்தில் சிவபெருமான் கோவிலிருந்தால் அந்த ஆலயத்திற்கு சென்று வழக்கம் போல வில்வ இலைகளை வாங்கி கொடுத்து உங்களுடைய வேண்டுதலை வையுங்கள். நந்தி தேவரை வணங்குங்கள். பிறகு சிவபெருமானை வணங்குங்கள். இந்த சிவபெருமான் ஒரு அபிஷேக பிரியர்
நந்தி தேவருக்கு நார்த்தங்காய் வாங்கி கொடுத்து, அபிஷேகம் செய்தால் உங்கள் கடன் சுமை குறையும். சொந்த நிலம் வாங்குவதில், சொந்த வீடு வாங்குவதில் பிரச்சனை இருந்தால், அந்த பிரச்சனைகள் விலகும். வீடு சம்பந்தப்பட்ட, நிலம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் விலக நார்த்தங்காய் அபிஷேகம் நந்தி தேவருக்கு செய்து வையுங்கள். வாடகை வீடு சம்பந்தப்பட்ட பிரச்சனையாக இருந்தாலும் அது சரியாகும்.
வெண்தாமரைப் பூவை வாங்கி கொடுத்து எம்பெருமானை வழிபாடு செய்தால், உங்கள் பணம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் அனைத்தும் தீரும். கடன் சுமை குறையும் என்று சொல்லப்பட்டுள்ளது. வெண்தாமரை கிடைப்பது அரிது என்பவர்கள் செந்தாமரை வாங்கி கொடுக்கலாம். தவறு கிடையாது. கூடுமானவரை வென்றாமரைக்கு முயற்சி செய்யுங்கள். இன்றைக்கே பூ கடைக்காரரிடம் சொன்னால் நாளை மாலைக்குள் அந்த பூ உங்கள் கையை வந்து சேரும்.
இளநீர், அந்த சிவபெருமானை குளிர வைக்கக்கூடிய இந்த இளநீர் அபிஷேகம் மிக மிக சிறந்தது. வீட்டில் இருப்பவர்களுடைய வேலைவாய்ப்பு நன்றாக இருக்க வேண்டும் தொழில் வளம் நன்றாக இருக்க வேண்டும் என்றால், ஈசனுக்கு அபிஷேகம் செய்ய இளநீர் வாங்கி தர வேண்டும்.
உங்கள் வீட்டில் இருக்கும் பிள்ளைகள் நல்ல வேலை கிடைக்கவில்லை, கை நிறைய சம்பாதிக்கவில்லை, அல்லது பிள்ளைகள் சுறுசுறுப்பாக வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருக்கிறார்கள், அவர்களுக்கு சுறுசுறுப்பு வந்து நல்லபடியாக வேலைக்கு சென்று சம்பாதிக்க வேண்டும் என்றாலும் இந்த இளநீரை நீங்கள் சிவபெருமானுக்கு வாங்கிக் கொடுக்கலாம்.
இதெல்லாம் விட, உங்க வீட்டு பக்கத்தில் இருக்கும் சிவன் கோவில் அர்ச்சகரிடம் போய் கேளுங்கள். உங்களுக்கு சிவபெருமானுக்கு அர்ச்சனை செய்ய எந்த பொருட்கள் தேவை என்று. அவர் அந்த கோவிலில் இல்லாத ஒரு சில பொருட்களை உங்களுக்கு சுட்டிக்காட்டுவார். அந்த பொருளை உங்களால் முடிந்த அளவு வாங்கிக் கொண்டு போய் கொடுப்பது மேலும் சிறப்பு வாய்ந்த பலனை கொடுக்கும். நம்பிக்கை உள்ளவர்களுக்கு இந்த எளிமையான பரிகாரங்கள் எல்லா நன்மைகளையும் செய்யும்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.