மதுரை விமான நிலையத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை சந்தித்த தவெக கட்சி நிர்வாகிகள்
மதுரை மாவட்டம் மேலூர்
அரிட்டாப்பட்டியில் டங்சனுக்கு எதிராக போராட்டம் நடை பெற்று வருகிறது.
டங்ஸ்டனுக்கு எதிராக போராடும் மக்களை சந்திப்பதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மதுரை விமான நிலையம் வந்தடைந்தார்.
மதுரை விமான நிலையம் வந்தடைந்த அண்ணாமலைக்கு பாஜக கட்சி நிர்வாகிகள் உற்சாக வரவேற்பளித்தனர்.
இந்த நிலையில் அண்ணாமலையை திடீரென்று தமிழக வெற்றிக்கழக கட்சி கட்சி நிர்வாகிகள் த.வெ க துண்டு மற்றும் விஜய் முகம் பொரித்த சட்டையுடன் அண்ணாமலையை சந்தித்தனர்.
இது குறித்து த.வெ க கட்சி நிர்வாகிகளிடம் கேட்டபோது அண்ணாமலை பார்க்க வேண்டும் என்றது நீண்ட நாள் ஆசை எனவே பார்த்தோம் என்று தெரிவித்தனர்.
தமிழக வெற்றி கழக துண்டுடன் தொண்டர்கள் பாஜக தலைவர் அண்ணாமலையை சந்தித்தது மதுரை விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.