கள்ளச்சந்தையில் கருப்பு பூஞ்சை மருந்து விற்ற 2 பேர் கைது

தாம்பரத்தை சேர்ந்தவர்கள் சிரஞ்சீவி(32), பிரசாந்த்(28). இவர்கள் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் தற்காலிக பணியாளர்கள் இருவரும் கள்ளச்சந்தையில் திருட்டுத்தனமாக கருப்பு பூஞ்சை மருந்தை விற்பனை செய்து வந்துள்ளனர்.

இதுகுறித்து புகாரின்பேரில் போலீசார் இருவரையும் நேற்று கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 1 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

தொடர்ந்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, புழல் சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் ஏற்கனவே 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

error: Content is protected !!