உலக பராம்பரிய மரபு வார விழாவை முன்னிட்டு தொல்லியல்துறை திருச்சி மண்டலம் சார்பாக மண்டல கண்காணிப்பாளர் அருண்ராஜ் தலைமையில் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் பகுதியில் மலை பின்புறம் உள்ள சமணர் குகை அருகே இன்றைய மாணவ மாணவிகள் தமிழின் தொன்மையையும் சமணர்களின் தொன்மையையும் அறிந்து கொள்ளும் வகையிலும் பராம்பரிய மரபு சின்னங்களை பாதுகாக்கும் வகையிலும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தென்பரங்குன்றம் உள்ளிட்ட மலையை சுற்றியுள்ள பகுதிகளில் மரபு நடை சென்றனர்.
அதனை தொடர்ந்து மாணவ மாணவிகள், பொதுமக்களுக்கு சமணர்களின் தொன்மை, தமிழின் தொன்மை பற்றியும், பராம்பரிய மரபு சின்னங்கள் பற்றியும் எடுத்துரைக்கப்பட்டது.