புற்று நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நடிகர் தவசி காலமானார்.
வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன் உள்ளிட்ட நூற்றுக்கணக்காக படங்களில் நடித்தவர் தவசி. இவர் கடந்த சில மாதங்களாக புற்றுநோயால் பாதிக்கப்படடு மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
மிகவும் மெலிந்த தோற்றத்துடன் ஆளே அடையாளம் தெரியாமல் மாறிப்போய், மருத்துவச் செலவுக்காக உதவி கேட்டு அவர் வீடியோ வெளியிட்டது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இதையடுத்து திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் பா.சரவணன் மற்றும் நடிகர்கள் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், சூரி, சிம்பு ஆகியோர் உதவி செய்தனர்.
இந்நிலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நடிகர் தவசி இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.