நாம் தமிழர் குருதிக்கொடை பாசறை சார்பாக சென்னை ராயப்பேட்டையில் இரத்த தான முகாம் நடைபெற்றது.
நாம் தமிழர் கட்சியின் 234 தொகுதி வேட்பாளர்கள் அறிவிப்புக் கூட்டம் தற்போது சென்னை ராயப்பேட்டையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இதில் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் இக்கூட்டத்திற்கு லட்சக்கணக்க்கானோர் வருகை தந்த வண்ணம் உள்ளனர்.
இக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,ஒரே மேடையில் 234 வேட்பாளர்களில் 117 பெண் மற்றும் 117 ஆண் வேட்பாளர்களையும் அறிமுகம் செய்து, 2021 நாம் தமிழர் கட்சி ஆட்சியின் செயற்பாட்டை வரைவை திரையீட்டு விளக்கவுரை ஆற்ற உள்ளார்.
இந்நிலையில் அறிமுகக்கூட்டத் திடலில் நாம் தமிழர் கட்சியின் குருதிக் கொடை பாசறையின் சார்பாக இரத்ததான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டு இரத்த தானம் வழங்கும் நிகழ்வு நடைபெற்று வருகிறது.
இந்த முகாமில் தானாக முன்வந்து 100 க்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் என இரத்ததானம் செய்து வருகின்றனர். இரத்ததானம் செய்தவர்களை பாராட்டி பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.
இதுவரை யாரும் கண்டிராத வகையில் அரசியல் கட்சி கூட்டத்தில் இரத்ததானம் முகாம் நடந்து வருவதை அரசியல் விமர்ச்சகர்கள், காவல்துறையினர் மற்றும் பொதுமக்களிடையே பெரிதும் பாரட்டைப் பெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.