மதுரை:குழிக்குள் விழுந்த காளையை அப்பகுதி இளைஞர்களே மீட்ட சம்பவம் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை திருப்பரங்குன்றம் அருகே தனக்கன்குளம் பகுதி கோயில் காளை ஒன்று கூத்தியார்குண்டு பகுதியில் சுற்றித் திரிந்து கொண்டிருந்த பொழுது பல வருடங்களாக செயல்பாடு இல்லாத கழிவுநீர் குழிக்குள் விழுந்தது.

இதை கண்ட அக்கம் பக்கத்தினர் உடனே திருமங்கலம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கவே விரைந்து வந்து கழிவுநீர்க் குழிக்குள் விழுந்த காளையை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

ஒரு மணிநேரம் போராடியும் மீட்க முடியாத நிலையில் அப்பகுதி இளைஞர்களே ஒன்று சேர்ந்து குழிக்குள் விழுந்த காளையை மீட்ட சம்பவம் அப்பகுதியில் மகிழ்ச்சி ஏற்படுத்தியது.

தொடர்ந்து அந்த காளைக்கு முதலுதவி அளிக்கப்பட்டு மீண்டும்சீரான நிலைக்கு திரும்பி நடந்தவாறு அப்பகுதியில் சுற்றித் திரிந்தது.

தீயணைப்புத் துறையினர் கைவிட்ட நிலையில் இளைஞர்கள் ஒன்று சேர்ந்து கோயில் காளையை காப்பாற்றிய சம்பவம் அப்பகுதியை நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

error: Content is protected !!