ஆரல்வாய்மொழி காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் உள்ள தலைவர்கள் சிலைக்கு பாதுகாப்பு பற்றி ஆலோசனை.

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் உள்ள தலைவர்கள் சிலைக்கு பாதுகாப்பு பற்றி ஆலோசனை கூட்டம் டி.எஸ்.பி வேணுகோபால் தலைமையில் நடைபெற்றது.


தமிழ்நாடு முழுவதும் உள்ள தலைவர்கள் சிலைகள் அடிக்கடி சில சமூக விரோதிகளால் சேதப்படுத்தல் படுவதால் அடிக்கடி சட்ட ஒழுங்கு பாதிக்கப்படுகின்ற சூழ்நிலை ஏற்படுவதால் தமிழக அரசானது உடனடியாக ஒவ்வொரு மாவட்டங்களிலும் உள்ள முக்கிதலைவர்களின் சிலைகளுக்கு பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுகவேண்டும் என உத்தரவு பிரப்பிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் மாவட்ட காவல்துறை மூலம் ஒவ்வொரு பகுதிகளிலும் உள்ள முக்கிய தலைவர்கள் சிலைக்கு பாதுகாப்பு வழங்குவது பற்றி ஆலோசனை வழங்கப்பட்டது. அதன் அடிப்படையில் ஆரல்வாய்மொழி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள அதாவது ஆரல்வாய்மொழி, செண்பகராமன்புதூர், தாழக்குடி, வெள்ளமடம் போன்ற பகுதிகளில் உள்ள முக்கியமான தலைவர்களின் சிலைக்கு பாதுகாப்பு சம்மந்தமாக அந்த அந்த தலைவர்களின் பிரதிநிகளை அழைத்து பாதுகாப்பு வழங்குவது சம்மந்தமாக ஆலோசனை கூட்டம் ஆரல்வாய்மொழி காவல் நிலையத்தில் வைத்து டி.எஸ்.பி வேணுகோபால் தலைமையில் நடைபெற்றது.இக்கூட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் அமைக்கப்பட்டுள்ள தலைவர் சிலையினை சுற்றி கண்காணிப்பு காமிரா அமைக்க வேண்டும் எனவும் மேலும் தலைவர்கள் சிலையினை சுற்றி பாதுகாப்பான முறையில் கம்பி அமைக்க வேண்டும் எனவும் ஆலோசனை வழங்கப்பட்டது. இக்கூட்டத்தில் சகாயநகர் ஊராட்சி மன்ற தலைவர் மகேஷ்ஏஞ்சல், அ.தி.மு.க பொதுகுழு உறுப்பினர் சுடலையாண்டிபிள்ளை, காங்கிரஸ் வட்டார தலைவர் முருகானந்தம் மற்றும் பல பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

error: Content is protected !!