கன்னியாகுமரி:குழந்தை இல்லாததால் கணவன் மனைவி தற்கொலை.

குமரி மாவட்டம் கோட்டாரில் குழந்தை இல்லாத ஏக்கத்தில் கணவன்-மனைவி விஷம் குடித்து தற்கொலை.
போலீசார் விசாரணை

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர் ஹரி.30 இவர் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த கஸ்தூரி.25. என்பவரை கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துகொண்டார். இதனைத்தொடர்ந்து காதல் தம்பதியினர் குமரி மாவட்டம் கோட்டார் பகுதியில் உள்ள பைத்துல்மால் நகர் பகுதியில் வசித்து வந்தனர். இவர்களுக்கு குழந்தை இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் இவர்கள் மனமுடைந்து காணப்பட்டனர்.

குழந்தை பாக்கியம் வேண்டி பல கோவில்களுக்கும், மருத்துவமனைகளுக்கும் சென்றும் குழந்தை இல்லாததால் மிகவும் மன வேதனையில் காணப்பட்டனர். இந்நிலையில் நேற்று இரவு கணவன் மனைவி இருவரும் வழக்கம்போல் தூங்க சென்றனர். ஆனால் காலை வெகுநேரமாகியும் வீட்டைவிட்டு வெளியே வராததால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது தம்பதிகள் இருவரும் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டது தெரியந்தது. இருவரது உடல்கள் அருகில் விஷ பாட்டில் காணப்பட்டது.

இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் கோட்டாறு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர. தகலின் பேரில் சம்பவ இடம் வந்த போலீசார் இருவரது உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Leave a Reply

error: Content is protected !!