குமரி மாவட்டம் நாகர்கோவிலில், தண்டு வடம் காயமடைந்தோர் அமைப்பினர் சார்பில் 6 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகம் எதிரில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
குமரி மாவட்ட தண்டுவட காயமடைந்தோர் அமைப்பினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மூன்று சக்கர வாகனங்களில் ஊர்வலமாக வந்து நாகர்கோவிலில் ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 50 க்கும் மேற்பட்ட மாற்று திறனாளிகள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டம் குறித்து அவர்கள் கூறுகையில், தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களுக்கு காப்பீடு திட்டம் வேண்டும், வெளி மாநிலங்களில் மாற்று திறனாளிகளுக்கு வழங்கப்படுவதை போன்று 5 ஆயிரம் ரூபாய் பென்சன் வழங்க வேண்டும் உள்ளிட்ட ஆறு அம்ச கோரிக்கையை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபடுகிறோம் என்றனர்.