கன்னியாகுமரி: அஞ்சுகிராமம் அருகே துணிகரம். கல்லூரி பேராசிரியையின் வீட்டில் பட்டப்பகலில் புகுந்து நகை கொள்ளை. பொதுமக்கள் அச்சம்.

குமரி மாவட்டத்தில் சமீபகாலமாக தொடர் திருட்டு,கொளைச் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக ஆள் இல்லாத வீடுகளை நோட்டமிட்டும், வயதானவர்கள் இருக்கும் வீடுகளை குறிவைத்து தொடர் கொள்ளை சம்பவங்கள் அரங்கேறி வருகிறது.

இதனை தடுக்க மாவட்ட எஸ்பி பத்ரி நாராயணன் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். எனினும் முறையான போலீஸ் ரோந்து பணி இல்லாததன் காரணமாக தொடர் திருட்டு,கொள்ளை சம்பவங்கள் மாவட்டத்தில் அரங்கேறி வருகிறது. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

குமரி மாவட்டம் அழகப்பபுரத்தைச் சேர்ந்தவர் ஜாண்போஸ்கோ மகள் ஹெப்சிபாய். 28. இவர் நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தான் பொட்டல்குளம் அருகில் உள்ள சுந்தராபுரம் கிராமத்தில் புதிய வீடு கட்டி குடி பெயர்ந்து உள்ளார்.

இவர் தாய், தந்தை மற்றும் தனது ஆறு வயது மகளுடன் அந்த வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் இவர் நேற்று காலை சுமார் 8.45 மணிக்கு அழகப்பபுரத்திலுள்ள ஒரு ஆலயத்திற்கு ஜெபத்திற்கு செல்வதற்காக வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் சென்று விட்டார்.

பின்னர், சுமார் பகல் 11 மணி அளவில் வீடு திரும்பியுள்ளார். வீட்டிற்குள் சென்று பார்த்தபோது உட்புற அறைகளின் கதவு திறந்து கிடந்தது. மேலும் பீரோக்கள் திறந்து துணிமணிகள் சிதறிக் கிடந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் மேலும் உள்ளே சென்று பார்த்தபோது பின்பக்க ஜன்னலை உடைத்து கம்பிகள் அறுக்கப்பட்டு இருந்தது.

மர்ம நபர்கள் வீட்டின் பின்பக்கமாக வந்து ஜன்னல் கம்பிகளை கட்டிங் மெஷின் கொண்டு சப்தமில்லாமல் அறுத்து வளைத்து விட்டு உள்ளே புகுந்த மர்ம நபர்கள்இ வீட்டில் இருந்த சுமார் 52 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து அவர் அஞ்சுகிராமம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். தகவலின் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். அதைத்தொடர்ந்து கைரேகை நிபுணர்களும் வந்து தடயங்களை சேகரித்தனர். மேலும் தனிப்படை போலீசாரும் வந்து விசாரணை நடத்தினர். மேலும் அருகில் உள்ள வீடுகளில் இருக்கும் கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர். பட்டப் பகலிலேயே வீடு புகுந்து துணிகரமாக நடந்த இந்த திருட்டுச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

error: Content is protected !!