மகேஷ்பாபுவுக்கு வில்லனாகிறார் பிருத்விராஜ்

இயக்குநர் ராஜமவுலி ‘ஆர்ஆர்ஆர்’ படத்தை அடுத்து இயக்கும் படத்தில் மகேஷ்பாபு ஹீரோவாக நடிக்கிறார். இதுபற்றி அவர் ஏற்கெனவே தெரிவித்திருந்தார். இது இண்டியானா ஜோன்ஸ் படம் போல ஆக்‌ஷன் அட்வென்சர் கதையாக இருக்கும் என்றும்மகேஷ்பாபுவின் கேரக்டரை ஹனுமனை நினைவூட்டும் வகையில் வடிவமைத்துள்ளதாகவும்கூறப்படுகிறது. இதன் படப்பிடிப்பு ஆப்பிரிக்க காடுகளில் நடக்க இருக்கிறது. இதில்பிருத்விராஜ் வில்லனாக நடிக்கிறார். இது வழக்கமான வில்லன்கேரக்டர் போல இருக்காதுஎன்றும் அவர் கதாபாத்திரத்துக்கான நியாயம் கதையில் இருக்கும் என்றும் தெரிகிறது.

படத்தின் பிரீ புரொடக்ஷன் வேலைகள் தொடங்கிவிட்டன. இதில் வெளிநாட்டு நடிகர்களும் நடிக்க இருக்கின்றனர். இந்தப் படம் இந்திய சினிமாவை அடுத்தக்கட்டத்துக்கு கொண்டு செல்லும் என்கிறார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!