“திண்டாமை எதற்கும் தீர்வாகது”… மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் “ஆரா” படம்!

சிவாவெங்கடாசலம் இயக்கத்தில் உருவாகியுள்ள இக்குறும்படத்தை திரைப்பட நடிகர் ப்ரஜின் மற்றும் பாலாஜி வெங்கட் ஆகியோர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலம் கடந்த மாதம் 26 ஆம் தேதி வெளியிட்டனர்.

ஜாதி இல்லை என்று சொல்லும் இக்கால கட்டத்தில் இருந்து கொண்டு அதிக அளவில் ஜாதி கலவரங்களில் ஈடுபடும் இளைஞர்களுக்காக உருவானது இந்த “ஆரா” குறும்படம். ஜாதி மதங்களால் மனிதர்கள் பிளவுபடவில்லை, பணத்தால் மட்டுமே மனிதர்கள் தாழ்த்தப்பட்டவர்கள் உயர்த்தப்பட்டவர்களாக பிளவு பட்டு இருக்கின்றனர் என்று இயக்குனர் சிவா வெங்கடாச்சலம் இக்குறும்படத்தின் மூலம் எடுத்துரைத்துள்ளார். மேலும் அவரிடம் கேட்டபோது, தனது முதல் திரைப்படத்தை இயக்க உள்ளதாகவும், அதன் அறிவிப்பு விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் கூறினார் குறும்பட இயக்குனர் சிவாவெங்கடாசலம்.

தொழிலதிபர் ஜகன் பிள்ளையின் தலைமையில் திருநெல்வேலியில் நடைபெற்ற மணமாலை விழாவில்,
குறும்பட இயக்குனர் சிவா வெங்கடாசலம் விரைவில் வெள்ளித் திரையில் தடம் பதிப்பதற்காக தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் அவர்களால் “இளம் படைப்பாளி” என்னும் விருது வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!