கஞ்சா, கொகேயின் மாதிரியான போதைப்பொருள் பயன்படுத்தி இறந்தால் 10 லட்சம்… கள்ளச்சாரயம் குடித்து உயிரை விட்டவர்களுக்கு நிவாரணம் அறிவித்தது சரியா?
கள்ளச்சாராயம் தடை விதிக்கப்பட்ட பொருளில் ஒன்று. தடையை மீறி குடித்து இறந்தவர்களுக்கு 10 லட்சம் நிவாரணம் அரசு தருகிறது. நாளை கஞ்சா, அபின், கொகேயின் மாதிரியான போதைப்பொருள் பயன்படுத்தி இறந்தால் 10 லட்சம் தருமா அரசு? விஷத்தை உண்டால் நஷ்ட ஈடு உண்டு என்ற எண்ணத்தை விதைக்கிறது அரசு.
உழைக்கும் போது இறந்தால் நிவாரண நிதி தருவதி நியாயம். கழிவுநீரில் வேலை செய்யும்போது விஷவாயு தாக்கி இறப்போர்கள் மற்றும் சிவகாசியில் பட்டாசு ஆலை விபத்து நேரிட்டால் எம்.எல்.ஏ உட்பட முதலமைச்சர் நேரில் சென்று பார்க்க கூட மாட்டார்கள். அதேபோல் அவர்கள் உழைக்கும் போது விபத்தால் இறந்து போனால் நிவாரணம் தருவதோடு சரி.
ஆனால் இந்த கள்ளச்சாராயம் பலிக்கு முதல்வர் உட்பட பலரும் நேரில் சென்று பார்ப்பது என்பது கேலிக்கூத்தாக உள்ளது. விட்டால் கள்ளச்சாராயத்தால் இறந்தோர் குடும்பத்துக்கு அரசுவேலையும் கொடுத்துவிடுவாார்கள் எனவும் இதற்கு பெயர் தான் திராவிட மாடல் ஆட்சியா எனவும் நெட்டிசன்கள் சூடு பறக்கும் விவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் இருவேறு இடங்களில் மீண்டும் தீவிரவாத தாக்குதல் நடந்துள்ளன. இதில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்டரில் ஒரு தீவிரவாதி கொல்லப்பட்டான். அதேநேரம், 6 வீரர்கள் காயமடைந்துள்ளனர். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நேற்று மட்டுமே இரண்டு தீவிரவாத சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. ஜம்மு காஷ்மீர் மாநிலம் தோடாவில் நேற்று இரவு ராணுவ தளம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து பாதுகாப்பு படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை நடைபெற்று வருகிறது. தற்போது வரை இந்த சண்டை…
புதுடெல்லி: உத்தரப்பிரதேசத்தில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியால் (பிஎஸ்பி) 14 தொகுதிகளை சமாஜ்வாதி இழந்துள்ளது. ஒரு தொகுதியிலும் வெற்றி பெறாத பிஎஸ்பியால் பாஜக பலன் அடைந்துள்ளது. உத்தரப்பிரதேசத்தில் ஐந்து முறை முதல்வராக இருந்தவர் பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி. தலித் ஆதரவுக் கட்சியான பிஎஸ்பிக்கு உபியில் செல்வாக்கு சரிவடைந்து வருகிறது. தற்போது முடிந்த மக்களவைத் தேர்தலில் எவருடனும் கூட்டணி இன்றி பிஎஸ்பி தனித்து போட்டியிட்டது. மற்றக் கட்சிகளை விடவும் அதிகமான வேட்பாளர்களையும் பிஎஸ்பி நிறுத்தியிருந்தது. ஜுன் 4ல்…
திருப்பரங்குன்றம் மலை விவகாரம்: அரசு அலுவலர்களின் அலட்சியப் போக்குதான் – ஆபத்தான சூழ்நிலையில் நாம் தள்ளப்பட்டு விட்டோம் -திருத்தொண்டர் சபை நிறுவனர் இந்துக்களும் இஸ்லாமியர்களும் சுதந்திரப் போராட்ட காலம் முதல் ஒற்றுமையாகவே இருந்து வந்துள்ளனர் தற்போது ஒரு சில பிரிவினை சக்திகளால் பிளவு படுத்த பார்கின்றனர் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் – திருத்தொண்டர் சபை ராதா கிருஷ்ணன். மதுரை திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள காசி விஸ்வநாதர் கோவில் மற்றும் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் சாமி…
கோவை: கோவையில் கஞ்சா போதையில் 5 இளைஞர்கள், 8 பேரை அரிவாளால் வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் அடுத்துள்ள பி & டி காலனியை சேர்ந்தவர் சண்முகசுந்தரம். தனியார் நிறுவனத்திற்கு வேலைக்கு செல்லும் இவர் தனது வீட்டு அருகே இளைஞர்களுக்கு வீடுகளை வாடகைக்கு விட்டுள்ளார். அதிலுள்ள ஓர் வீட்டில் பனியன் தொழிற்சாலைக்கு வேலைக்கு செல்லும் திருநெல்வேலியைச் சேர்ந்த சிவா என்ற இளைஞர் தங்கியுள்ளார். இவருக்கு நேற்று பிறந்தநாள் என்பதால் இவரது நண்பர்களான திருநெல்வேலியைச்…
அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி முருகன் கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். பழனி முருகன் கோயிலுக்கு வரும் பக்தர்கள் பெரும்பாலானோர் முடி காணிக்கை செலுத்துவது வழக்கம். பழனி திருக்கோவிலில் மொட்டை அடிக்கும் தொழிலாளர்களுக்கு தமிழக அரசு அறிவித்த மாதங்தோறும் 5000ரூபாய் ஊக்கதொகையை வழங்காததால், திருக்கோவில் நிர்வாகத்தையும்,தமிழக அரசையும் கண்டித்து 300க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கோரிக்கை பேட்ஜ்களை அணிந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக பழனி கோயில் சார்பில் சண்முகநதி, சரவண பொய்கை, ஒருங்கிணைந்த முடி…