மதுரை விமான நிலையத்தில் போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு – காவல் துறையினரால் போதை விழிப்புணர்வு கையெழுத்து பலகையில் பயணிகள் ஆர்வத்துடன் கையெழுத்திட்டு சென்றனர்

தமிழ்நாடு முழுவதும் இன்று போதை ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

போதை ஒழிப்பு குறித்து காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு இடங்களில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்ற வருகிறது

இந்த நிலையில் மதுரை விமான நிலையத்தில் போதை ஒழிப்பை முன்னெடுக்கும் விதமாகவும் பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் போதை ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு கையெழுத்து பலகையானது விமான நிலையம் நுழைவாயில் மற்றும் பயணிகள் உள்ளே வெளியே வரும் வழிகளில் வைக்கப்பட்டது.

மதுரை மாநகர காவல் துறை ஆணையர் லோகநாதன் உத்தரவின் பேரில் அவனியாபுரம் காவல்துறையினர் சார்பாக போதை ஒழிப்பு விழிப்புணர்வு கையெழுத்திடும் பலகையானது வைக்கப்பட்டது.

மேலும் விமான நிலையத்தின் உள்ளே இருந்து வரும் பயணிகள் மற்றும் வெளியே வரும் பயணிகளிடம் மத்திய பாதுகாப்பு படையினர் துணை ஆணையர் விஸ்வநாதன், அவனியாபுரம் காவல் உதவிஆணையர் செல்வகுமார் காவல் ஆய்வாளர் மணிக்கு மார் மற்றும் விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் இணைந்து பயணிகளுக்கு போதை ஒழிப்பு விழிப்புணர்வு குறித்த பிரசுரங்களை கொடுத்தனர்.

போதையினால் எந்த அளவு விபத்துகளும், ஆபத்துக்களும், போதையினால் மனிதனின் உடலில் எவ்வளவு மாற்றங்கள் ஏற்படுகிறது என்பது குறித்து பயணிகளுக்கு விரிவாக எடுத்துரைத்தனர்.

போதை ஒழிப்பு விழிப்புணர்வு பலகையில் பயணிகள் முன்வந்து போதையை இனி பயன்படுத்த மாட்டோம் என்று காவல்துறை அதிகாரிகள் முன் உறுதி மொழி எடுத்துக் கொண்டு போதை ஒழிப்பு கையெழுத்து பலகையில் பயணிகள் ஆர்வமாக கையெழுத்திட்டு சென்றனர்.

செய்தியாளர் வி காளமேகம்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!